×

தொழில்நுட்பத்தை வளர்த்தால் பல்கலையில் பணம் குவியும்: நெடுஞ்செழியன், கல்வியாளர்

இடஒதுக்கீட்டை காட்டிலும் அண்ணா பல்கலைக்கழத்தில் வசதியற்ற மாணவர்கள் படிக்க முடியவில்லை என்பதே பெரும் பிரச்னையாக உள்ளது. சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு உள்ளே வருகிறார்கள். ஸ்டேட் போர்ட் மாணவர்கள் உள்ளே வரமுடியவில்லை. சமவாய்ப்பு என்பது அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்போது இல்லை. பல்கலை கழகத்தை பிரிப்பது என்பது வரவேற்கத்தக்கது என்றாலும் 4 கல்லூரிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் வைத்துக்கொள்ள வேண்டும். மீதி கல்லூரிகளை நிர்வாகத்திற்கு ஏற்றாற்போல் வைத்துக்கொள்ள வேண்டும். 1978ல் இருந்தே இந்த கல்லூரிகளின் பெயர் தான் வெளிநாடுகள் வரை தெரியும்.

இதேபோல், சிறப்பு அந்தஸ்தை பொறுத்தவரையில் ஐ.ஓ.இ நிதி வாங்க வேண்டும் என்பது முக்கியம் கிடையாது. அண்ணா பல்கலைக்கழகம் தொழில்நுட்ப வளர்ச்சியை வளர்த்தாலே கோடிக்கணக்கில் வருவாய் ஈட்ட முடியும். கூகுள் கம்பெனியே ஒரு பல்கலைக்கழகத்தின் உள்ளே இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இப்போது, பல்கலைக்கழகத்திற்கு கூகுளில் இருந்து பலகோடி ரூபாய் வருவாய் செல்கிறது. இதுபோன்ற தொலைநோக்கு திறனை வளர்க்கும் கல்வித்தலைமை இங்கு இல்லை என்பதே இப்பல்கலைக்கழகத்திற்கு ஒரு பின்னடைவாக உள்ளது. மாறுதலுக்கு ஏற்றவாறு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாணவர்களின் திறனை வளர்த்து இதுபோன்ற நடைமுறையில் ஈடுபடுத்த வேண்டும்.

ஐஐடிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். ஆனால், ஐஐடிக்கு இணையாக இவர்களால் கல்வித்தரத்தை கொண்டுசெல்லமுடியவில்லை. ஒரு கல்லூரிக்கு வருமானத்தை கொண்டுவருவதற்கு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினாலே போதும். மேலை நாடுகள் இதில் பெரும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் என்று கூறிவிட்டு இதை செய்யவில்லை என்றால் எப்படி பலன் கிடைக்கும். ஆயிரம் கோடி தருகிறார்கள் என்பதற்காக சிறப்பு அந்தஸ்தை கொண்டுவருவதை விட்டுவிட்டு துணைவேந்தர் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் ஐந்தாயிரம் கோடி வருவாய் ஈட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

 மாணவர்களை வைத்து எவ்வளவோ செய்யலாம். நமது கல்விநிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து பணத்தை பெற்றே நிறுவனத்தை நடத்த வேண்டிய அவல நிலையில் உள்ளது. ஆக்கப்பூர்வமாக செய்யக்கூடிய விஷயங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். உலகம் செல்லும் வேகத்திற்கு இந்த பல்கலைக்கழகம் செல்லவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. மக்களின் தேவையை அறிந்து தொழில்நுட்ப வளர்ச்சி வாயிலாக அதை கொண்டுவந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை செய்யாததால் தான் பெரும் பின்னடைவை சந்திக்கின்றன. இல்லை என்றால் உலகத்தரம் என்பதற்கு அருகிலேயே செல்ல முடியாது.

சிறப்பு அந்தஸ்து கொடுப்பதன் மூலம் கிராமப்புறத்தை சேர்ந்த ஒரு மாணவர் கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர முடியாது. மாணவர்களின் சேர்க்கை விகிதமும் குறைந்துவிடும். கல்வியில் சமவாய்ப்பு என்பதை கொடுக்க முடியாது. அரசியல் உள்ளே வந்தாலே கல்வியில் வளர்ச்சி இருக்காது. ஒரு துணைவேந்தரை வைத்து தமிழக அரசால் ஏன் வேலை வாங்க முடியவில்லை? அரசு கல்வியை பற்றி கவலைப்படவில்லை என்பதற்கு இது ஒரு பெரிய உதாரணமாக உள்ளது. தனிநபர் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி ஆகும். ஒற்றைச்சாளர கலந்தாய்வு முறையை கொண்டுவர வேண்டும்.

சிறப்பு அந்தஸ்து கொடுப்பதன் மூலம் கிராமப்புறத்தை சேர்ந்த ஒரு மாணவர் கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர முடியாது. மாணவர்களின் சேர்க்கை விகிதமும் குறைந்துவிடும். கல்வியில் சமவாய்ப்பு என்பதை கொடுக்க முடியாது. அரசியல் உள்ளே வந்தாலே கல்வியில் வளர்ச்சி இருக்காது.

Tags : educator ,university , If you develop technology, you will accumulate money in the university: educator, educator
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரை...